வடக்கில் லட்சக்கணக்கான ஏக்கர் காணி விடுவிப்பு - அநுர அரசின் அதிரடி அறிவிப்பு

Sri Lanka Army Sri Lankan Tamils Northern Province of Sri Lanka National People's Power - NPP NPP Government
By Thulsi Oct 03, 2025 02:34 AM GMT
Report

வன்னி மாவட்டத்திலே 101,762.75 ஏக்கர் (ஒரு இலட்சத்து ஆயிரத்து எழுநூற்று அறுபத்திரண்டு புள்ளி எழுபத்தைந்து ஏக்கர்) நிலங்களை மக்களுக்காக விடுவிக்க இருக்கின்றோம் என சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய அரசாங்கம் கடந்த ஜூலை மாதம் வன பாதுகாப்பு இடங்களாக கிட்டத்தட்ட 30 இடங்களை அடையாளம் கண்டு அதனை பாதுகாக்கின்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இருந்தது.

அரச அனுசரணையுடன் நாட்டிற்குள் போதைப்பொருட்கள் - சாடும் விமல் வீரவன்ச

அரச அனுசரணையுடன் நாட்டிற்குள் போதைப்பொருட்கள் - சாடும் விமல் வீரவன்ச

ஜிபிஎஸ் தொழில்நுட்பம் 

இந்நிலையில் கடந்த கால அரசாங்கங்கள் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலமாக வடக்கு கிழக்கு பகுதிகளிலே அளவீடுகளை மேற்கொண்டிருந்தனர்.

வடக்கில் லட்சக்கணக்கான ஏக்கர் காணி விடுவிப்பு - அநுர அரசின் அதிரடி அறிவிப்பு | Acres Of Civilian Land Acquisition In The North

இவ்வாறு அளவீடு மேற்கொள்ளும் போது மீள்குடியேறிய மக்களின் வாழ்விடங்கள், விவசாயநிலங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், அரச நிலங்கள் என்பனவும் வன பிரதேசங்களிற்கு உள்வாங்கும் நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக இங்கே பாரிய ஒரு காணி பிரச்சனை காணப்பட்டது.  இதன் காரணமாக குறித்த திட்டத்தை இங்கே நடைமுறைப் படுத்தப்படாமல் இருந்தது.

2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அமைச்சரவை மட்டத்தில் தீர்மானம்

நாம் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் இதற்கான உரிய தீர்மானங்களை மேற்கொண்டு வன்னி நிலப்பரப்பிலே 101,762.75 (ஒரு இலட்சத்து ஆயிரத்து எழுநூற்று அறுபத்திரண்டு புள்ளி எழுபத்தைந்து ஏக்கர்) நிலங்களை மக்களுக்கு விடுவிக்க இருக்கிறோம்.

வடக்கில் லட்சக்கணக்கான ஏக்கர் காணி விடுவிப்பு - அநுர அரசின் அதிரடி அறிவிப்பு | Acres Of Civilian Land Acquisition In The North

அதிலே வவுனியா மாவட்டத்திற்கு 22,804.40 ஏக்கர் (இருபத்தி இரண்டாயிரத்து எண்ணூற்று நான்கு புள்ளி நாற்பது ஏக்கர்) நிலமும் மன்னார் மாவட்டத்தில்178,82.8 ஏக்கர் (பதினேழாயிரத்து எண்ணூற்று எண்பத்தி இரண்டே புள்ளி எட்டு ஏக்கர்) நிலமும் முல்லைத்தீவு மாவட்டத்திலே 48.532.6 ( நாற்பத்தெட்டாயிரத்து ஐநூற்று முப்பத்தி இரண்டு புள்ளி ஆறு ஏக்கர்) ஏக்கர் நிலங்களையும் விடு விக்கப்பட இருக்கின்றது.

ஆனால் இவ்வாறு நிலங்கள் விடுவிக்கப்பட்டாலும் பிரச்சனைகள் மேலும் இருக்கின்றது என்பதை நாங்கள் தற்கால மேற்பார்வைகளின் மூலம் இனம் கண்டிருக்கின்றோம்.

எனவே அதனையும் தீர்க்கும் முகமாக அமைச்சரவை மட்டத்திலே கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி ஒரு அமைச்சரவை தீர்மானத்தை எடுத்திருந்தோம்.

விசேட குழு

அந்த அமைச்சரவை தீர்மானத்தின் படி, வன வள திணைக்களத்தின் எல்லைப்படுத்தப்பட்டிருக்கின்ற இந்த காணிகளை விடுவிப்பதற்காக அனைத்து திணைக்களங்களும் உள்ளடங்களாக ஒரு விசேடமான குழுவினை நாங்கள் நியமித்திருக்கின்றோம்.

வடக்கில் லட்சக்கணக்கான ஏக்கர் காணி விடுவிப்பு - அநுர அரசின் அதிரடி அறிவிப்பு | Acres Of Civilian Land Acquisition In The North

வனவள திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை நிச்சயமாக மக்களுக்காக விடுவிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையிலே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களை விரைவுபடுத்தும் என்றார்.

யாழில் சட்ட விரோதமாக மண் அகழ்வு: களத்திற்கு இளங்குமரன் எம்.பி அதிரடி விஜயம்

யாழில் சட்ட விரோதமாக மண் அகழ்வு: களத்திற்கு இளங்குமரன் எம்.பி அதிரடி விஜயம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026