யாழில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை
யாழ். வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பல்வேறு இடங்களில், பல வகையான போதைப்பொருட்களுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 10 நாட்களாக வெவ்வேறு இடங்களில் வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இவ்வாறான கைதுகள் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனையோர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்தி - கஜி
பெருமளவு கேரள கஞ்சா
மேலும், யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட பெருமளவு கேரள கஞ்சா இன்றைய தினம் நீதிமன்ற உத்தரவுக்கமைய அழிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 950 கிலோகிராம் கேரள கஞ்சா அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ். கோம்பயன் மணல் இந்து மயானத்தில் உள்ள மின் தகன மேடையில் போடப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் மற்றும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்ற நீதிவான் உசைன் ஆகியோரின் முன்னிலையில் இன்று மதியம் குறித்த போதைப்பொருள் தொகுதி அழிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக நீதிமன்ற சான்றுப் பொருளாக வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சாவே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளது.
செய்தி - தீபன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்