மக்களின் 30 வருட கால கசப்பான அனுபவங்களை போக்க வேண்டும் : கடற்றொழில் அமைச்சர்

Jaffna Anura Kumara Dissanayaka Ramalingam Chandrasekar
By Sathangani Sep 02, 2025 06:51 AM GMT
Report

உளக்காயங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் 30 வருட கால கசப்பான அனுபவங்களை போக்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.

அத்துடன் எமக்கு தொல்லை கொடுத்து வரும் இந்திய படகுகளை அகற்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான படகுகள் எமது நாட்டில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்தில் - மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை நேற்று (01) ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை - நாமல் ராஜபக்ச வாக்குமூலம்

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை - நாமல் ராஜபக்ச வாக்குமூலம்

துறைமுக நடவடிக்கைகள்

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “மயிலிட்டி என்பது வரலாற்று முக்கியமான மீன்பிடித் துறைமுகமாகும். நாட்டில் இரண்டாவது இடத்தில் இருந்த இந்த மீன்பிடித்துறைமுகம் காணப்பட்டது. கடந்த 30 வருடங்களாக காணப்பட்ட நிலைமை காரணமாக இந்த துறைமுக நடவடிக்கைகள் செயலிழந்து காணப்பட்டது.

மக்களின் 30 வருட கால கசப்பான அனுபவங்களை போக்க வேண்டும் : கடற்றொழில் அமைச்சர் | Action To Remove Nuisance Indian Boats Minister

இந்த பிரதேசத்தில் காணி, கடற்றொழிலாளர்களின் கடல்வளம் பகிர்வதில் உள்ள முரண்பாடு என பிரச்சினைகள் காணப்பட்டன. எமது கடற்றொழிலாளர்கள் சட்டவிரோதமான மீன்பிடி முறைகளை கடைபிடிக்கும் நிலைமையும் காணப்பட்டது.

எமது அரசாங்கம் இந்த அனைத்து நிலைமைகளையும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து துறைமுகத்தையும் கடற்துறையையும் சீரான திசையை நோக்கி கொண்டு செல்ல எதிர்பார்க்கிறது.

முல்லைத்தீவிற்கு ஜனாதிபதி அநுர விஜயம்

முல்லைத்தீவிற்கு ஜனாதிபதி அநுர விஜயம்

ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு

இந்த துறைமுகத்தை முன்னேற்றகரமான துறைமுகமாக மாற்ற வேண்டும். உளக்காயங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்பினால் அன்றி வேறு எதனாலும் திருப்திப்படுத்த முடியாது.

எந்த அபிவிருத்தி மேற்கொண்டாலும் காணி விடுவித்தாலும் பாதைகளை திறந்த போதும் அவர்களின் 30 வருட கால கசப்பான அனுபவங்களை போக்க வேண்டும் என்பது ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.

மக்களின் 30 வருட கால கசப்பான அனுபவங்களை போக்க வேண்டும் : கடற்றொழில் அமைச்சர் | Action To Remove Nuisance Indian Boats Minister

3 ஆம் கட்ட பணிகளை ஆரம்பித்து பூரண துறைமுகமாக இதனை மாற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படுகிறது. இந்த துறைமுகம் உங்களுடையது. இதனை நீங்கள் தான் காக்க வேண்டும்.

எமக்கு தொல்லை கொடுத்து வரும் இந்திய படகுகளை அகற்றவும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான படகுகள் எமது நாட்டில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளன.

ஆழ்கடல் மீன்பிடித்துறை ஊடாக கடற்றொழிலை மேம்படுத்த வேண்டும். அதற்கான உதவிகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது.” என தெரிவித்தார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் - வெளியான அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் - வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026