நடிகரை காணவில்லை : காவல்துறையில் முறைப்பாடு
சினிமா மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் பல ஆண்டுகளாக பங்களித்த விருது பெற்ற நடிகரும் கலை இயக்குநருமான ரஞ்சித் டி சில்வா, நவம்பர் 19 ஆம் திகதி மாலை 6.00 மணிக்குப் பிறகு காணாமல் போனார்.
காணாமல் போனது குறித்து பேலியகொட தலைமையக காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக அவரது மருமகன் லஹிரு விஜேரத்ன தெரிவித்தார்
கடைசியாக பார்த்த இடம்
காணாமல் போன நேரத்தில் ரஞ்சித் டி சில்வா வீட்டில் இருந்ததாகவும், பின்னர் வெள்ளை டி-சேர்ட் மற்றும் நீல நிற டெனிம் கால்சட்டை அணிந்து வெளியே சென்றதாகவும் அவர் மேலும் கூறினார். களனி டயர் சந்திக்கு அருகில் பலர் அவரை கடைசியாகப் பார்த்ததாக மருமகன் குறிப்பிட்டார்.
75 வயதான டி சில்வாவுக்கு மறதி நோய் இருந்ததாகவும், வீட்டை விட்டு வெளியேறும்போது பணப்பை அல்லது கைபேசி போன்ற எதையும் தன்னுடன் எடுத்துச் செல்லவில்லை என்றும் மருமகன் தெரிவித்தார்.
தகவல் தெரிந்தவர்கள்
“இசுரு பாவனா”, “பிடகம்கராயோ”, “தேவந்தயா” போன்ற பிரபலமான தொலைக்காட்சி நாடகங்களிலும், “நெய்னகே சூடுவா” மற்றும் “சார்ஜென்ட் நல்லதம்பி” போன்ற மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.
இவர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 071 654 3296 / 076 739 6901என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறும் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தெரிவிக்குமாறும் அவரது மருமகன் அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
