அம்பலமான எடப்பாடியின் அதிமுக பிளவு: சட்டசபையில் அரங்கேறி நிகழ்வு
அதிமுக இரண்டாக உடைய சூழல் இருப்பதாக பேசப்பட்ட நிலையில், அதனை உறுதி செய்யும் நிகழ்வு ஒன்று சட்டசபையில் அரங்கேறி உள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (11-05-2026) காலை 9.30 மணிக்குச் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் ஆரம்பமானது.
சட்டசபையில் முதல் கூட்டம் தொடங்கிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி தலைமையிலும், சிவி சண்முகம் தலைமையிலும் தனித்தனியாக சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர்.
அதிமுகவில் பிளவு
இந்த நிலையில் சட்டசபைக்கு எடப்பாடி தலைமையில் கேபி முனுசாமி உள்ளிட்ட சிலர் வந்தனர். சிறிது நேரம் கழித்து சி.வி சண்முகம் தலைமையில் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் வந்தனர்.

வழக்கமாக எடப்பாடி பழனிச்சாமி வரும்போதுதான் அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் அவர் தலைமையில் வருவார்கள்.
ஆனால் எடப்பாடி ஒரு டீம் ஆகவும், சிவி சண்முகம் ஒரு டீம் ஆகவும் சட்டசபைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டிருப்பது உறுதி தான் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |