சீரற்ற வானிலையால் அதிகரிக்கும் இழப்புக்கள் : இருவர் பலி 9,000 பேர் பாதிப்பு!
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏறத்தாழ 9,000 பொதுமக்கள் பாதிக்கப்பட்டது மாத்திரமல்லாமல் 02 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையின்படி, ஆறு மாவட்டங்களில் 2,373 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 8,974 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்னும் அதிகரிக்கும்
அதன்படி, இரத்தினபுரி, பதுளை, கம்பஹா, மாத்தறை, காலி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களே அனர்த்தத்துக்குள்ளான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாகவும், திடீர் வெள்ளம் மற்றும் பலத்த காற்று காரணமாக 1,152 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு சீரற்ற வானிலை தொடருமானால் ஏற்படும் இழப்புக்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.