அமெரிக்க விமானத்தில் அழகான குழந்தையை பிரசவித்த ஆப்கான் பெண்
afghan woman
delivered
united states flight
By Jaso
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய கர்ப்பிணி பெண்ணுக்கு அமெரிக்க விமானத்தில் குழந்தை பிறந்தது.
தலிபான்களுக்கு அஞ்சி அமெரிக்க விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறிய கர்ப்பிணிக்கு நடுவானில் பிரசவ வலி ஏற்பட்டது. தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமானதால், விமானத்தில் நிலவும் காற்றழுத்தத்தை குறைப்பதற்காக விமானத்தை தாழ்வாகப் பறக்கச் செய்தார் விமான ஓட்டி.
ஜேர்மனியில் உள்ள அமெரிக்க விமானப் படை தளத்தில் விமானம் தரை இறக்கப்பட்ட சில வினாடிகளில் கர்ப்பிணி பெண்ணுக்கு அழகான குழந்தை பிறந்தது. தாயும் சேயும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தற்போது இருவரும் நலமுடன் உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி