இலங்கையை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா..! இருவர் பலி
COVID-19
COVID-19 Vaccine
Ministry of Health Sri Lanka
By Laksi
குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் நீண்ட நாட்களின் பின்னர் இந்த இரண்டு மரணங்களும் நேற்று(11)பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று உறுதி
குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் நோயாளிகள் இருவர் உயிரிழந்ததையடுத்து சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நோயாளி சிகிச்சை பெற்ற விடுதி தொகுதியில் உள்ள நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றுநோய் நிலைமை புறக்கணிக்கப்பட்டபோது மீண்டும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்