மொட்டு - ரணில் இடையே ஏற்பட்ட இணக்கம்
Amaratunga John
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
ஆளுநர் நியமனம் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இதன்படி ஐந்து மாகாணங்களின் ஆளுநர் பதவிகளில் மாற்றம் எதுவும் செய்யக்கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதிபர் ரணிலுக்கு இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
நான்கு ஆளுநர்கள் நியமனம்
எனினும் நான்கு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் அடுத்தவாரம் நியமிக்கப்படவுள்ளனர். இவர்களில் மூன்று முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஆளுனர் ஒருவரும் அடங்குவதாக தெரியவருகிறது.
இதேவேளை, தமக்கு ஆளுநர் பதவி கிடைக்கப் போவதாக முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அண்மையில் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்