அமெரிக்காவுடன் ஒப்பந்தமா ? முற்றாக மறுக்கிறது அரசாங்கம்
கெலவரபிட்டிய யுகதனவி மின் நிலையம் தொடர்பாக அமெரிக்காவுடன் இறுதி ஒப்பந்தம் எதுவும் கையெழுத்திடப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்(G.L. Peiris) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்னும் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். அனைவரின் கருத்துகளையும் கேட்டபின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அதுவரை எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கண்டி ஹத்தரலியத்தவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்திய வெளிவிவகார செயலாளரின் இலங்கை விஜயம் குறித்து பீரிஸ் கருத்து தெரிவித்தார். அவரது வருகையால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று குறிப்பிட்டார்.
இதனிடையே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே(Gamini Lokuge) சமீபத்தில் ஒரு அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாகதெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.