அஹுங்கல்ல துப்பாக்கிச்சூடு: உடந்தையாக இருந்த சந்தேக நபர் கைது
Sri Lanka Police
Gun Shooting
Arrest
By Dharu
காலி - அஹுங்கல்ல, வெலிகந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இது தொடர்பில் அஹுங்கல்ல காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில் சந்தேக நபர் நேற்று (07) வெலிகந்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைக்குண்டு மீட்பு
விசாரணையின்போது, சந்தேக நபரின் வீட்டிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று, புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர் 28 வயதான இளைஞர் என தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |