பலாலி உட்பட அனைத்து விமான நிலையங்களிலும் தயார் நிலையில் விமானப்படை
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை அடுத்து ஏதாவது அவசரநிலை ஏற்பட்டால் உதவிகள் வழங்குவதற்கு விமானப்படையின் ஹெலிகொப்டர்கள் உட்பட சுமார் 10 விமானங்கள் தயார்நிலையில் உள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன (Sudarshan Pathirana)தெரிவித்தார்.
இரத்மலானை, அனுராதபுரம், பலாலி, வீரவில, அம்பாறை, கட்டுகுருந்த, கொக்கல, தியத்தலாவை, வவுனியா, மட்டக்களப்பு, புத்தளம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விமானப்படைத் தளங்களிலும் அனர்த்தங்களைச் சமாளிப்பதற்கு விசேட பயிற்சி பெற்ற விசேட அதிரடிப்படையினர் (STF) சிறப்பு குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெல் 212, பெல் 412, எம்.ஐ. 17, Y12 விமானம் மற்றும் ஒரு விமான கண்காணிப்பு விமானம் பேரிடர் கண்காணிப்பு மற்றும் வெள்ள கண்காணிப்புக்கு தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்காக இரத்மலானை விமானப்படை தளத்தில் 3 ஹெலிகொப்டர்கள் மற்றும் 30 வீரர்கள் அடங்கிய மீட்புக் குழு தயார் நிலையில் உள்ளது.