அவசரமாக தறையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சான்பிரான்சிஸ்கோவிலில் இருந்து டில்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்றே இவ்வாறு மங்கோலியாவுக்கு திருப்பி விடப்பட்டு தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஏர் இந்தியா விமானம் AI 174 சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் இருந்து புதுடில்லிக்கு புறப்பட்டுள்ளது.

விமானமானது கோல்கட்டா வழியாக டில்லி வந்து சேர வேண்டும்.
பாதுகாப்பு காரணங்கள்
இருப்பினும், நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானிகள் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் மங்கோலியாவின் உலான்பாடர் நகரத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானம் மிகுந்த பாதுகாப்புடன் தரையிறக்கப்பட்டது எனவும் மற்றும் எவ்வித நெருக்கடியும் இல்லை எனவும் விமான நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |