காற்றின் தரம் பாதிப்பு : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பதுளை மாவட்டத்தில் வளிமண்டலத்தில் வழமைக்கு மாறாக தூசித்துகள்களின் செறிவு அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதய குமார தெரிவித்தார்.
இந்த நாட்களில் இலங்கைக்கு வெளியிலிருந்து வீசும் காற்றில் உள்ள சிறிய தூசித்துகள்கள் உள்நாட்டுக்கு வந்து பதுளை மாவட்டம் முழுவதும் வளிமண்டலத்தில் பரவியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் மலை அமைப்பின் தொலைதூரக் காட்சியைப் பார்க்கும்போது, கருமையான மூடுபனி தெரியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
இது சாதாரண வளிமண்டலத்தில் இருக்க வேண்டிய தூசி அடர்த்தியை விட அதிக அடர்த்தியாக உள்ளதாகவும் இதன் காரணமாக பொதுச் சுகாதாரம் பாதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் சுவாசக் கோளாறு உள்ள சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதானமாக இருக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளதுடன் சுகாதார திணைக்களங்களும் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் உதய குமார மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |