இலங்கையுடன் வணிக விமான சேவையை ஆரம்பிக்க உள்ள உலகின் முதல் நிலை விமான சேவை
By Shalini
உலகின் முதல்நிலை விமான சேவையாக கருதப்படும் எயார் பிரான்ஸ் விமான சேவை இலங்கைக்கான வணிக விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 05ஆம் திகதியிலிருந்து இந்த விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
பாரிஸ் நகரில் தற்போது இடம்பெற்றவரும் சர்வதேச சுற்றுலா சந்தைக் கண்காட்சியில் கலந்துகொண்டுள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் எயார் பிரான்ஸ் விமான சேவை நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்குமிடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் ஒரு வாரத்துக்கு 3 நேரடி விமான சேவைகளை முன்னெடுக்க எயார் பிரான்ஸ் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.