கட்சிக்குள் இருந்து புலம்புவதைவிட வெளியேறலாம்- ஆளும் பங்காளி கட்சிகள் தொடர்பில் அஜித் பி. பெரேரா!
அரசியல் கட்சிகள் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் அரசாங்கத்தை விட்டு வெளியேற முடியும் என அஜித் பி. பெரேரா(Ajith P.Perera) தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
அரசாங்கத்திற்குள் இருக்கும் கட்சிகள் ஊடக சந்திப்புகளில் வெளிப்படையாக பேசினாலும் அமைச்சரவை கூட்டங்களின் போது மௌனமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆகவே 11 பங்காளிக் கட்சிகளும் அரசாங்கத்தை விட்டு வெளியேறாமல் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்தும் புலம்பிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை விட்டு வெளியேற விரும்பினால் வெளியேறலாம், அவ்வாறு வெளியேறிய பின்னரும் அவர்களால் அரசியலில் ஈடுபட முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.