இலங்கை முழுவதும் களமிறங்கிய 16,894 பொலிஸ் அதிகாரிகள்! ஒரே நாளில் சிக்கிய 3,880 பேர்
srilanka
arrest
police
ajith rohana
By Vasanth
இலங்கை முழுதும் நேற்று முன்னெடுக்கப்பட்ட சிறப்பு பொலிஸ் நடவடிக்கையில் 3,880 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பல்வேறு குற்றங்களில் 672 பேர், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1,572 பேர், சிறு குற்றங்களில் 127 பேர், மது மற்றும் போதைப்பொருள் குற்றங்களில் 983 பேர், சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்தவர்கள் 8 பேர், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 518 பேர் என மொத்தமாக 3,880 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் 494 காவல் நிலையங்களைச் சேர்ந்த 16,894 அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் 60 பொலிஸ் நாய்களும் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.