யாழில் அனுர வரிசையில் தையிட்டி பிக்கு : புத்தர்சிலை பிக்கு உண்ணாநிலை நாடகம் முடிவு!
மடியில் பூனையை கட்டிக்கொண்டு சகுனம் பார்ப்பதுபோல தனது யாழில் நிகழ்வில் சர்ச்சைக்குரிய தையிட்டி பிக்குவுக்கும் தனக்கு அருகில் முன்வரிசையில் இடம்வழங்கிய அனுர தையிட்டி சகுனத்தை தமிழர்களுக்கு சொல்லத்தலைப்பட்டார்.
தமிழ்தேசிய அரசியல்பரப்பில் ஈழத்தமிழர்களுக்கு இப்போது ஸ்ரேற்மன்ஸ் எனப்படும் உறுதியான தீர்மானம்மிக்க அரசியல் தலைவர்கள் எவரும் இல்லாமல் அரசியல்வாதிகள் மட்டும் அல்லக்கை உதிரிகள் மட்டுமே உள்ளதால் ஒன்றில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் காட்டுக்கத்தல்கள் வருகின்றன.
அல்லது நல்லிணக்கத்தின் பெயரில் நுட்பமான ஆஹா… ஓகோ வித்தைகள் வருகின்றன.
ஆல்பழுத்தால் அங்கே கிளி அரசு பழுத்தால் இங்கே கிளிபாணி என அலைபாயும் இந்த ஊடகவித்தைக்கார்கள் முன்னர் ரணிலுக்காக மாய்ந்து மாய்ந்து எழுதினார்கள் இப்போது ஏகேடியாருக்கு மாய்ந்து மாய்ந்து எழுதும் ஒரு காலம் வந்துள்ளது அவ்வளவுதான்.
ஆனால் இவர்களின் ஆஹா… ஓகோ வித்தைகள் வந்தாலும் கொழும்பு அதிகார மையத்தின் கொலுவிருப்பாளர்களோ தமது அடிப்படைக் கொள்கைகளில் இதுவரை எந்த சிஸ்ரம் சேஞ்களையும் அதாவது முறைமை மாற்றங்களையும் வெளிப்படுத்தாத நிலையில் இந்தவிடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு..
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |