உடனடியாக சர்வகட்சி மாநாட்டை கூட்டுங்கள்! மஹிந்தவிடம் அவசர வேண்டுகோள்

srilanka covid19 corona mahinda tissa vidarana
By S P Thas May 13, 2021 07:01 AM GMT
Report

தற்போதைய சூழ்நிலையில், கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றி கொள்வதற்கு அனைத்து கட்சி தலைவர்களையும் உள்ளடக்கிய சர்வகட்சி தலைவர் கூட்டத்தை விரைவாக நடத்துவது சிறந்த என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண வலியுறுத்தியுள்ளார்.

அலரிமாளிகையில் பிரதமர் தலைமையில் இடம் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர் கூட்டம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றி கொள்வதற்கு அனைத்து தரப்பினரது ஒத்துழைப்பும் அவசியமாகும். எனவே அனைத்து கட்சி தலைவர்களையும் உள்ளடக்கிய சர்வ கட்சி தலைவர் கூட்டத்தை விரைவாக நடத்துவது அவசியமாகும் என இதன் போது பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது.

பிரதமர் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கூட்டணியின் உள்ளக விவகாரம் குறித்து பேசப்படவில்லை. அதற்கான தருணம் இதுவல்ல. கொவிட் -19 தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளல் மற்றும் செலுத்தல் ஆகிய நடவடிக்கைகளை சிறந்த முறையில் தொடர்ந்து முன்னெடுத்து செல்வது அவசியமாகும்.

அத்துடன் கொவிட் வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியில் நிவாரணம் வழங்குவது குறித்து உரிய திட்டங்களை வகுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கினார்.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தல், பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தியதாக இக்கூட்டம் அமைந்திருந்தது. கொவிட் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்ட ஒரு சில நடவடிக்கைகளில் குறைபாடுகள் காணப்பட்டமை இதன் போது சுட்டிக்காட்டப்பட்டன.

தற்போதைய சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் கடுமையான முறையில் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதன் அவசியம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. புதிதாக வகுக்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு திட்டங்கள் தெளிவுப்படுத்தப்பட்டன.

கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளல் மற்றும் செலுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை தொடர்ந்து சிறந்த முறையில் முன்னெடுத்து செல்வது அவசியமாகும். இதற்கு அனைத்து தரப்பினரது ஒத்துழைப்பும் அவசியமாகும்.

கொவிட் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பையும் பெறுவது அவசியமாகும். இதற்கு சர்வ கட்சி தலைவர் கூட்டத்தை விரைவாக ஏற்பாடு செய்வது அவசியம் என்ற கோரிக்கையை பிரதமரிடம் முன்வைத்துள்ளோம்.

கொவிட் வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார மட்டத்தில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

இவ்விடயம் குறித்து முறையான திட்டங்களை வகுக்குமாறு பிரதமர் உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கினார். கொவிட் வைரஸ் தாக்கம் குறித்து அனைத்து தரப்பினரும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்ற காரணத்தினால் கூட்டணியின் உள்ளக விவகாரம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவில்லை என்றார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022