வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்பட்ட பிசிஆர் ஆய்வகம் தற்போது பழுதடைந்த நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆய்வகம் செப்ரெம்பர் 25 அன்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவால் திறந்து வைக்கப்பட்டது. நாளொன்றுக்கு ஒரு மணி நேரத்தில் 500 பேருக்கு பி சி ஆர் சோதனைகளை நடத்தும் என்றும் ஆய்வகம் 7000 சோதனைகளைச் செய்யும் திறன் கொண்டது என்றும் அதன் திறப்பு நேரத்தில், அறிவிக்கப்பட்டது.
விமான நிலையம் மூலம் நாட்டிற்குள் நுழையும் மக்களிடம் PCR சோதனைக்கு PCR கட்டணம் $ 40 வசூலிக்கப்படும். மூன்று மணி நேரத்திற்குள் அறிக்கைகளை வழங்குவதே இதன் நோக்கம். ஆனால் தற்போது ஆய்வகம் செயல்படவில்லை.
விமான நிலைய PCR ஆய்வகத்தின் திறமையின்மை காரணமாக, வழக்கம் போல் வெளிநாட்டிலிருந்து திரும்பும் மக்கள் சுரண்டப்படத் தொடங்கியுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஓமல்பே சோபித தேரர் கூறுகையில், ஆய்வகமானது செயலற்றதாக இருப்பதன் நன்மை, இதனால் பலனடையும் வியாபாரிகளுக்குதான் என தெரிவித்துள்ளார்.