தண்ணீரால் அலர்ஜி: அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்
அமெரிக்கா பெண்ணொருவருக்கு தண்ணீர் பட்டாலே ஒவ்வாமை ஏற்பட்டுவிடும் விநோதமான நோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு சிலருக்கு தூசியினால் மருந்தினால் உணவினால் என ஒவ்வொரு வகையில் ஒவ்வாமை ஏற்படும். இந்நிலையில் பெண் ஒருவருக்கு தண்ணீரால் ஒவ்வாமை ஏற்படும் அரிய நோய் இருப்பதாக மருந்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த நோய் கலிபோர்னியாவைச் சேர்ந்த 25 வயதான டெஸ்ஸா ஹன்சன் என்ற பெண்ணிற்கே ஏற்பட்டுள்ளது. இவருக்கு தண்ணீர் உடம்பில் பட்டாலே ரேஷஸ், ஒவ்வாமை ஏற்படும் உடல் தடித்து விடுமாம்.
அரிய வகை நோய்
இந்த நோய் மருத்துவ ரீதியில் ''அக்வாஜெனிக் யூர்டிகார்சியா'' எனப்படுகிறது. இந்த அரிய வகை நோய் உலகிலேயே 100 – 250 பேருக்கே ஏற்பட்டுள்ளது.
1964ல் முதன் முதலாக ஒருவருக்கு கண்டுபிடிக்கப்பட்டது. சிறு துளி நீர் பட்டாலும் சருமம் தடித்து விடும்.நீர் மட்டும் கிடையாது வியர்வை கண்ணீர் பட்டால் கூட இதே நிலைதான்.
டெஸ்ஸா ஹன்சன் என்ற பெண்ணுக்கு 8 வயது முதலே இந்த நோய் இருந்துள்ளது. தீவிரமான பரிசோதனைக்கு பின்னரே இதனை கண்டுபிடித்துள்ளனர்.
அக்வாஜெனிக் யூர்டிகார்சியா
அதிகமாக நீர் அருந்தினால் கூட எரிச்சல் ஏற்பட்டு ஒவ்வாமை ஏற்பட்டு விடுமாம், பாலில் கொழுப்பு சத்து இருப்பதால் அதுவே இவரது உணவாக இருக்கின்றது.
தாகத்தினால் தண்ணீர் குடித்துவிட்டால் தீவிரமான வலி ஏற்பட்டு பலமுறை மயங்கி விழுந்து விடுவாராம்.
இந்த அக்வாஜெனிக் யூர்டிகார்சியா என்ற வினோத நோய்க்கு இதுவரையில் எந்த சிகிச்சைகளும் கண்டுபிடிக்க வில்லை.
உணவு கட்டுப்பாடும் நீர் பயன்படுத்துதலை குறைத்தலுமே தற்காலிக தீர்வாக காணப்படுகிறது.
மேலும் இந்த நிலை தீவிரமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.