இஸ்ரேலின் கோரத் தாக்குதல்! உறைய வைக்கும் காசா நிலவரம்
இஸ்ரேலின் கோரத் தாக்குதலால், காசாவில் வாழும் 50,000 கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக ஐநா சபை தகவல் தெரிவித்துள்ளது.
தொடர் தாக்குதல்களால், காசாவில் வாழும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியோர் என்று ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐ. நாவின் அறிக்கை
ஐநா சபை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, காசாவில் சுமார் 50,000 கர்ப்பிணிகள் மருத்துவ உதவிகள் கிடைக்காமல் அவதியுறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிலும் அடுத்த ஒரு மாதத்தில் 5,500 பேருக்கு பிரசவம் நடக்கும் நிலையில் இருப்பதாக தெரிகிறது.
பாதுகாப்பான குழந்தை பிறப்புக்கு கேள்விக்குறி எழுவதோடு, குழந்தை வளர்ப்பும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
காசாவில் ஒட்டுமொத்தமாக 25 சதவீதமான வீடுகள் சிதைக்கப்பட்டுள்ளன. 59 மருத்துவமனைகள், 170 கல்விநிலையங்கள், குடிநீர் மற்றும் சுகாதார நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்த இலங்கையர்கள் : பயங்கரவாதிகளாக கருதப்படலாம் என எச்சரிக்கை
15 நிமிடத்திற்கு 1 குழந்தை பலி
இதைவிட கொடூரம் என்னவெனில் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு 1 குழந்தை பலியாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்பதே உலக மக்களின் ஒற்றை வேண்டுகோளாக உள்ளது.