இயற்கையான முறையில் கூந்தலை அசுர வேகத்தில் வளர வைக்கும் கற்றாழை எண்ணெய்!
Hair Growth
Beauty
Life Style
By Shalini Balachandran
அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.
இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
🛑 தேவையான பொருட்கள்
- கற்றாழை - 2 துண்டு
- தேங்காய் எண்ணெய் - 1லிட்டர்

🛑 பயன்படுத்தும் முறை
- முதலில் கற்றாழையை எடுத்து தண்ணீரில் நன்கு கழுவி அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு வாணலில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து சூடாக்கவும்.
- இதையடுத்து இதில் கற்றாழையை சேர்த்து நன்கு கொதித்ததும் அடுப்பை அனைத்து குளிர வைக்க வேண்டும்.
- பிறகு எண்ணெயில் உள்ள கற்றாழை துண்டுகளை நீக்கிவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து பயன்படுத்தலாம்.
- இந்த எண்ணெயை தலைமுடியின் உச்சி முதல் நுனி வரை நன்கு தடவி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.
- இறுதியாக மென்மையான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசிக்கொள்ளலாம்.
- இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர முடி நன்கு அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்