படுகொலை செய்யப்பட்ட அயதுல்லா அலி கமேனியின் இறுதி சடங்கு நடைபெறும் திகதி அறிவிப்பு
அமெரிக்க -இஸ்ரேலிய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி அஞ்சலி, இறுதிச் சடங்கு மற்றும் நல்லடக்கச் சடங்குகள் குறித்த விவரங்களை ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதன்படி தெஹ்ரான், கோம் மற்றும் மஷ்ஹத் ஆகிய இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
இறுதி அஞ்சலி நிகழ்வுகள், ஜூலை 4, சனிக்கிழமை மற்றும் ஜூலை 5, ஞாயிற்றுக்கிழமைகளில், தெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி முசல்லாவில் (மாபெரும் தொழுகை மண்டபம்) நடைபெறும்.
இறுதி ஊர்வல நிகழ்வு
ஜூலை 6, திங்கட்கிழமை அன்று, இறுதி ஊர்வல நிகழ்வு தெஹ்ரானில் நடைபெறும். ஜூலை 7, செவ்வாய்க்கிழமை அன்று, புனித நகரமான கோமில் மற்றொரு இறுதி ஊர்வல நிகழ்வு நடைபெறும்.

இறுதி நிகழ்வு ஜூலை 9, வியாழக்கிழமை அன்று, மஷ்ஹத் என்னும் புனித நகரில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து இமாம் ரிஸா (அலை) அவர்களின் புனித ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப்படும்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |