கோர விபத்தில் சிக்கிய இந்திய விமானப்படை விமானம்! ஐவர் பலி
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏஎன்-32 போக்குவரத்து விமானம் ஒன்று இன்று (13) அசாமின் ஜோர்ஹட் விமானப்படைத் தளத்தில் விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் இருந்த ஐந்து வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.
ஜோர்ஹாட் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விமானம் விபத்துக்குள்ளானதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
43வது படைப்பிரிவு
விபத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை, மேலும் இது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான ஏஎன்-32 விமானம், இந்திய விமானப்படையின் 43வது படைப்பிரிவைச் சேர்ந்தது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விபத்து நடந்த இடத்தில் தீயணைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
The Indian Air Force deeply regrets the loss of five personnel in the An-32 accident at Jorhat, Assam.
— Indian Air Force (@IAF_MCC) June 13, 2026
Sqn Ldr Prashant Singh, Flt Lt Shubham Kumar, Sgt Jitendra Sharma, Agniveervayu Khemaram Kumawat and Agniveervayu Danish Alam made the supreme sacrifice in the line of duty.… pic.twitter.com/9SmOjtS5mU
இது குறித்து வெளியாகிய அறிக்கையில், இந்திய விமானப்படை இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
“இன்று ஜோர்ஹட்டில் தரையிறங்கும்போது இந்திய விமானப்படையின் ஏ.என்-32 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது, என்று இந்திய விமானப்படை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
“விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு வருகிறது.”
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! . |