கொழும்பில் அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல் : அழைப்பை பதிவிட்டவர் கைது
கொழும்பில்(colombo) உள்ள அமெரிக்க(us) தூதரகம் மற்றும் அதன் அதிகாரிகள் மீது தீவிரவாத குழு பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட நபரை 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, சந்தேக நபருக்கான மனநல அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இன்று (24) உத்தரவிட்டார்.
பயங்கரவாத எதிர்ப்பு புலனாய்வுப் பிரிவால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பத்தரமுல்லையைச் சேர்ந்த அமர் ஷபீர் உசேன் அம்பாஸ், என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் முன்வைத்த சமர்ப்பணம்
இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையை சமர்ப்பித்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், அமெரிக்க தூதரகம் மற்றும் அதன் அதிகாரிகள் மீது தீவிரவாத பயங்கரவாதக் குழு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வட்ஸ்அப் பதிவுகளை வெளியிட்ட சந்தேக நபரை மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதால், காவலில் வைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சந்தேக நபரை ஒரு மனநல மருத்துவரிடம் முற்படுத்தி, அவருக்கு ஏதேனும் மனநலக் கோளாறுகள் உள்ளதா என்பதைக் கண்டறிய மனநல அறிக்கையை அழைக்குமாறு கோரினர்.
சந்தேக நபரின் மனநல அறிக்கைகளை அழைக்க உத்தரவிட்ட நீதவான், அவரை 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்குமாறும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

யாழில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாய் மற்றும் மகனின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 4 மணி நேரம் முன்
