அதிரடியாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் (S. Viyalendiran) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றைய தினம் (25.03.2025) இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விளக்கமறியல்
காணி ஒன்று தொடர்பில் 15 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் செயலாளர் உள்ளிட்ட இருவர் முன்னர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, குறித்த தொகை கையூட்டலை பெறுவதற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பில் (Batticaloa) உருவாக்கப்பட்ட கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்னும் கூட்டமைப்பில் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன் (கருணா அம்மான்) மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ள நிலையில் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 4 மணி நேரம் முன்
