தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு! கூட்டமைப்பைச் சந்தித்த பிரான்ஸ் தூதுவர்
சிறிலங்காவிற்கான பிரான்ஸ் தூதுவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்றைய தினம் பிரான்ஸ் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் (R.Sampanthan), கட்சியின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran), செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiya Rasamanickam) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த சந்திப்பின் போது ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர், புதிய அரசியலமைப்பு, தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு, ஐரோப்பிய ஒன்றியமும், பயங்கரவாத தடைச் சட்டமும் மற்றும் தற்போது நடைபெற்று வருகின்ற சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.