மட்டக்களப்பில் வெளிநாட்டு தூதுவர்கள் : பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்து கலந்துரையாடல்
Batticaloa
Sri Lankan Peoples
Eastern Province
By Laksi
இலங்கைக்கு விஜயம் செய்த மூன்று நாட்டு தூதுவர்களும் நேற்றைய தினம்(5) மட்டக்களப்பிற்கு விஜயம் செய்து பலரையும் சந்தித்து வருகின்றனர்.
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஜஸ்டின் பிளோட், ஜப்பான் தூதுவர் மிஷ்கோசி கிடாகி, தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சாண்லி எட்வின் சாள்க் ஆகியோரே விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
பண்ணையாளர்களை சந்தித்து கலந்துரையாடல்
அந்த வகையில் இன்றைய தினம்(6) கடந்த 174 நாட்களாக போராட்டம் நடாத்தி வரும் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர்.
இக் கலந்துரையாடலில் பண்ணையாளர்களுடன் இணைந்து யாழ்பாணத்தில் இருந்து வருகை தந்த சிவில் சமூக செயற்பாட்டாளர் வேலன் சுவாமிகள், மட்டக்களப்பு சிவில் சமூக செயற்பாட்டாளர் சிவயோகநாதன், பரசுராமன், பண்ணையாளர்கள் சங்க தலைவர் நிமலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்