வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த ஜே.வி.பி தலைவர்!
ஆறு வெளிநாடுகளின் தூதுவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பானது இன்று(6) பிற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளால் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றி இராஜதந்திரிகளுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டதோடு நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் பற்றியும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாடுகளுடன் பரஸ்பர நன்மதிப்பு
அத்துடன் நாடுகளுடன் பரஸ்பர நன்மதிப்பு மற்றும் ஒத்துழைப்பினை அடிப்படையாகக் கொண்டு செயலாற்றுவதற்கான தேசிய மக்கள் சக்தியின் தயார் நிலை பற்றியும் இந்த சந்திப்பின் போது தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் இராஜதந்திரிகளுக்கு எடுத்துரைத்தார்கள்.
இந்த சந்திப்பில் பலஸ்தீனத்தின் தூதுவர் கலாநிதி சுஹைர் எம் எச் டார் சைட், துருக்கி குடியரசின் தூதுவர் ஆர்.டிமெட் செகெர்சியொக்லு, பங்களாதேஷ் குடியரசின் உயர்ஸ்தானிகர் டரெக் எம்.டி அரிபுல் இஸ்லாம், இந்தோனேசிய குடியரசின் தூதுவர் டெவி கஸ்டினா டொபிங், மேற்படி தூதரகத்தின் பிரதம கொன்சல் ஹெரு பிரெயிட்னோ, மலேசிய உயர்ஸ்தானிகர் பட்லி ஹிசாம் பின் அடம் மற்றும் மாலைதீவு குடியரசின் பதில் தூதுவர் பாத்திமாத் கினா ஆகிய இராஜதந்திரிகள் அந்நாடுகளைப் பிரதிநிதித்துவம்செய்து கலந்து கொண்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, நளிந்த ஜயதிஸ்ஸ, டாக்டர் றிஷ்வி சாலி மற்றும் முதித்த நாணாயக்கார ஆகியேர் கலந்து கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |