வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள பல கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பான நிலை நிலவுவதன் காரணமாக, வளிமண்டலவியல் திணைக்களம் 'அம்பர்' நிறத்திலான அவசர எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
காங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக கற்பட்டி வரையிலான மற்றும் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பிராந்தியங்களில் வளிமண்டலவியல் திணைக்களம் 'அம்பர்' எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடல் பகுதிகள் கொந்தளிப்பு
மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான மற்றும் காங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக கற்பட்டி வரையிலான கடல் பிராந்தியங்களில் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடுவதுடன், கடல் பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

நீர்கொழும்பில் இருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் அலையின் உயரம் சுமார் 2.5 முதல் 3.0 மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் இதன் காரணமாக கடலோரப் பகுதிகளில் கடல் நீர் உட்புகும் அபாயமும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடற்றொழில் மற்றும் கடற்படை சமூகத்தினர் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |