ஜனநாயக தேர்தல் திருவிழா : இந்தியாவை பாராட்டும் அமெரிக்கா
தேர்தல் பணிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்த இந்தியா(india)வுக்கு அமெரிக்க(us) அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர்(Matthew Miller) செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"மாபெரும் தேர்தல் பணியை வெற்றிகரமாக நடத்தி முடித்த இந்திய அரசுக்கும், வாக்காளர்களுக்கும் அமெரிக்க அரசு சார்பில் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.
வரலாற்றின் மிகப்பெரிய ஜனநாயக பணி
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள் பற்றி நாங்கள் எந்த கருத்தும் கூறப்போவதில்லை.
கடந்த 6 வாரங்களாக வரலாற்றின் மிகப்பெரிய ஜனநாயக பணியில் மக்கள் பங்கேற்று வாக்கு செலுத்தியதை நாம் கண்டோம்.
இந்தியாவுடனான உறவு தொடரும்
இந்திய அரசு மற்றும் இந்திய மக்களுடன் அமெரிக்காவுக்கு நல்ல கூட்டுறவு இருந்து வருகிறது. இனி வரும் காலங்களிலும் அது தொடரும் என எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.
இந்தியாவில் மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19ம் திகதி தொடங்கி ஜூன் 1ம் திகதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (04) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |