கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய முக்கிய அன்பளிப்பு
srilanka
pcr
america
By Sumithiran
அமெரிக்க தூதரகம் இன்று (25) ரூ .13 மில்லியன் மதிப்புள்ள 4700 பி.சி.ஆர் சோதனை கருவிகளை சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைத்தது.
இந்தோ-பசுபிக் மேம்பாட்டுக் குழுவின் பணிப்பாளர் பிராட்லி எல்டர், மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறைத்துறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமனவிடம் வழங்கினார்.
இந்த பி.சி.ஆர் சோதனை கருவிகளை நாடு முழுவதும் பி.சி.ஆர் சோதனைகளை நடத்தும் ஆய்வகங்களுக்கு சுகாதார அமைச்சகம் விநியோகிக்கும்.
இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் டொக்டர் சஞ்சீவ முனசிங்க, அமைச்சகங்களின் செயலாளர்கள் சமன் ரத்நாயக்க, அமல் ஹர்ஷா டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.




மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்