களமிறங்கும் அமெரிக்க சிறப்புப் படை: இஸ்ரேல் போரின் புதிய திருப்பம்
காசாவில் ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களை மீட்கும் பணிகளுக்காக அமெரிக்காவின் சிறப்பு பயிற்சி பெற்ற படைகள் களமிறங்கியுள்ளன.
கடந்த 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர் அதனையடுத்து இஸ்ரேல் போர் பிரகடனம் அறிவித்து தொடர்ந்து பயங்கரமாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலை சேர்ந்த மக்களை பணயக்கைதிகளாக கடத்திச் சென்று பாலஸ்தீன மக்களுக்கு எச்சரிக்கை வழங்காமல் தாக்குதல் நடத்தினால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை கொலை செய்வோம் என எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க படைகள்
இதனால், பணயக்கைதிகளை மீட்கும் சிறப்பு பயிற்சி பெற்ற அமெரிக்க படைகள் இஸ்ரேலுக்கு வந்திறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
BREAKING:
— Visegrád 24 (@visegrad24) October 10, 2023
American Special Operations Forces trained in hostage situations have arrived in Israel.
A Pentagon official says the U.S. doesn't rule out performing operations to liberate kidnapped Americans now held in Gaza
???? pic.twitter.com/0VWEd2m9i8
அத்தோடு, இந்த அமெரிக்க சிறப்பு படைகள் ஹமாஸ் அமைப்பினரால் காசா நகரில் பிடித்து வைத்துள்ள பிணைக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் விரைவில் களமிறங்களாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அதே சமயம் காசாவில் பிணைக் கைதிகளாக கடத்தப்பட்டுள்ள அமெரிக்கர்களை சிறப்பு நடவடிக்கை மூலம் விடுவிக்கும் நடவடிக்கையை அமெரிக்கா நிராகரிக்கவில்லை என்று பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.