இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க உயர் அதிகாரி
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின்(America) துணை செயலாளர் டொனால்ட் லூ(Donald lu) இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஐயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இதன்படி, இந்தியா(India), இலங்கை(Sri lanka) மற்றும் பங்களாதேஷ்(Bangladesh) ஆகிய நாடுகளுக்கான பயணத்தை இன்று(10) டொனால்ட் லூ( ஆரம்பித்துள்ளார்.
எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ள இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர் இலங்கைக்கும் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் லூவின் பயணம்
டொனால்ட் லூவின் 3 நாடுகளுக்கான பயணமானது, ஒவ்வொரு நாட்டுடனும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்பதுடன் சுதந்திரமான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் ஆதரவை நிரூபிக்கும் வகையில் அமையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு பயணம் செய்யும் டொனால்ட் லூ, தென்னிந்தியாவில் இருதரப்பு ஈடுபாட்டை மேம்படுத்தும் நோக்கில் சென்னையிலுள்ள துணைத் தூதரக அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.
இந்திய பயணத்தை நிறைவு செய்ததன் பின்னர் இலங்கைக்கு வருகை தரும் அவர், அமெரிக்காவின் பங்களிப்பை ஆழப்படுத்தும் நோக்கில் முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இலங்கையின் பொருளாதார மீட்சி
அத்துடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான அமெரிக்காவின் ஆதரவையும், சுதந்திரமான மற்றும் ஜனநாயக சமூகத்தின் அடிப்படை வலுவான குடிசார் சமூகத்தின் முக்கியத்துவத்தையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கான பயணத்தை தொடர்ந்து, பங்களாதேஸிற்கு பயணம் செய்யும் டொனால்ட் லூ, அந்த நாட்டின் அரச அதிகாரிகள், குடிசார் சமூகத் தலைவர்களை சந்திக்கவுள்ளதுடன் காலநிலை நெருக்கடியை நிவர்த்தி செய்வது மற்றும் பொருளாதார உறவுகளை ஆழப்படுத்துவது உள்ளிட்ட, அமெரிக்க - பங்களாதேஷ் நாடுகளுக்கான ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |