அம்பாறையில் கோர விபத்து: இருவர் பலி
Sri Lanka Police
Ampara
Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வீதியில் பயணித்த ஒரு மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி ஒன்றை முந்திச் செல்ல முயன்ற போது எதிரில் வந்த மற்றுமொறு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்தினால் படுகாயமடைந்த மூவரையும் பொத்துவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கல்முனைவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த 51 மற்றும் 77 வயதுடையவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் பொத்துவில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்