அரசை வீட்டுக்கு அனுப்புவோம் - அம்பாறையில் தீ பந்த போராட்டம்
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து அரசுக்கு எதிரான கோஷங்களுடன் மக்கள் விடுதலை முன்னணி அம்பாறையில் தீ பந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இப்போராட்டத்தில் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அடங்கிய பிரமுகர்கள் தீப்பந்த போராட்டத்தை அம்பாறை மாவட்டம் கல்முனை நகரில் நேற்று இரவு முன்னெடுத்துள்ளனர்.
எரிபொருள் விலையேற்றம், அரசி விலை, பசளை ,உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பில் கடுமையான கண்டனத்தை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்வெளியிட்டிருந்தனர்.
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, கல்முனை, சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து அரசை கண்டித்த கோஷங்களையும் அமைச்சர்கள் சொகுசு வாகனங்களில் அப்பாவி மக்கள் எண்ணை சட்டிக்குள்.
போதும் போதும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம், விலை ஏற்றி ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, போன்ற கோஷங்களை எழுப்பி அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என்று குரலெழுப்பியதை காண முடிந்தது.






