கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் : சர்வதேச விசாரணையே வேண்டும் : சிறீதரன் கோரிக்கை

Mullaitivu TNA S. Sritharan
By Sumithiran Sep 11, 2023 10:12 PM GMT
Report

  கொக்குத்தொடுவாய் மண்ணின் விடயத்தை சர்வதேச சமூகம் கையிலே எடுக்கும். சரியான விடையை தருவதற்கு சர்வதேச விசாரணையே வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

   கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இடம்பெறும் இடத்தை இன்று (11)பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நுணுக்கமான அகழ்வு

முன்பு அகழப்பட்ட முறைக்கும் தற்போது அகழப்படுகின்ற முறைக்கும் வித்தியாசம் இருப்பதனை பார்க்க முடிந்தது. பல்கலைக்கழக மாணவர்களும் தொல்பொருள் ஆய்வு திணைக்களத்தினை சேர்ந்தவர்களுடைய வழிகாட்டல் ஆலோசனைகளோடு நுணுக்கமாக தொல்பொருள் ஆய்வாளர் அகழ்ந்தெடுப்பதனை பார்க்க கூடியதாக இருந்தது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் : சர்வதேச விசாரணையே வேண்டும் : சிறீதரன் கோரிக்கை | An International Investigation Srtharan

எடுக்கப்பட்ட தடயப்பொருட்களை வைத்து பார்க்கின்ற போது நூற்றுக்குநூறு வீதம் பெண் போராளிகளுடையது என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. இறுதி யுத்தத்தின் போது கைது செய்யப்பட்டிருக்கின்ற காணாமல் ஆக்கப்பட்ட போராளிகளுடையதாக இருக்கும் என்பதற்கான ஆதாரமாக தான் இதனை பார்க்கின்றோம்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தமிழ் மக்களுக்கு ஆறுதலை வழங்குவது கேள்விக்குறியே: கஜேந்திரகுமார் விசனம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தமிழ் மக்களுக்கு ஆறுதலை வழங்குவது கேள்விக்குறியே: கஜேந்திரகுமார் விசனம்

கடந்த 6 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் இவ் விடயம் தொடர்பில் அண்மைக்காலமாக இவ்வாறு தமிழ் பகுதிகளில் தமிழ் இளைஞர், யுவதிகள் எலும்புக்கூடுகளாக எடுக்கப்பட்டிருக்கின்ற விடயம் தொடர்பில் எந்தவித விடயங்களும் முன்வைக்கப்படவில்லை.

சர்வதேசமே தீர்வை வழங்கவேண்டும்

இன்றையதினம் ஆரம்பிக்கின்ற 54 ஆவது கூட்டத்தொடர் ஒருமாதங்களில் முடிவடைகின்ற போதாவது முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மண்ணின் விடயத்தையும் சர்வதேச சமுகம் கையிலே எடுக்கும். அதற்கு சரியான விடையை தருவதற்கு சர்வதேச ரீதியான விசாரணை வேண்டும் என்பதனை மிகப்பெரிய அடையாளமாக இதனை கருத்தில் எடுப்பார்கள் என பூரணமாக நம்புகின்றோம்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் : சர்வதேச விசாரணையே வேண்டும் : சிறீதரன் கோரிக்கை | An International Investigation Srtharan

சர்வதேசத்தை தவிர வேறு யாராலும் இதற்கு ஒரு தீர்வை எட்ட முடியாது அதனால் தான் நாங்கள் சர்வதேச சமுகத்தை நம்புகின்றோம்.

மிகப்பெரிய சாட்சி

இறுதி யுத்தத்தின் போதும் ஐக்கிய நாடுகள் சர்வதேசத்தினுடைய நிறுவனங்கள் இந்த மண்ணிலே இருந்து மக்கள் மறிக்கும்போது விட்டு சென்றிருந்தார்கள் . தற்போதும் அவர்களால் தான் ஒரு தீர்வை எட்ட முடியும். அதனால் தான் மீண்டும் அவர்களிடத்தே வலியுறுத்துகின்றோம்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் : சர்வதேச விசாரணையே வேண்டும் : சிறீதரன் கோரிக்கை | An International Investigation Srtharan

அந்தவகையில் இந்த இடத்தினை பார்வையிட்டு எமது உறவுகள், பிள்ளைகள், குழந்தைகள் எவ்வாறு மிக மிலேச்சத்தனமாக , நாகரிகமற்ற முறையில் இலங்கை அரச பயங்கரவாத படைகளால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு இதொரு மிகப்பெரிய சாட்சியாக இருக்கிறது. இதற்கான கால மாற்றமும், சூழலும் சரியான விடையை தரும் என்ற நம்பிக்கையோடு தான் இந்த இடத்தை பார்வையிட்டு செல்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாயில் ஐந்தாம் நாள் அகழ்வு பணிகள் நிறைவு: இதுவரை ஐந்து உடற்பாகங்கள் மீட்பு!

கொக்குத்தொடுவாயில் ஐந்தாம் நாள் அகழ்வு பணிகள் நிறைவு: இதுவரை ஐந்து உடற்பாகங்கள் மீட்பு!

ReeCha
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024