யாழில் கிணறு ஒன்றில் இருந்த இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Kajinthan
யாழ்ப்பாணம் - மருதனார்மடம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் அவதானிக்கப்பட்டுள்ளது.
மருதனார்மடம் பகுதியில் உள்ள தனியார் பண்ணை வளாகத்தில் உள்ள கிணற்றிலேயே இன்று (07) காலை குறித்த சடலம் அவதானிக்கப்பட்டது.
அத்துடன் குறித்த நபரின் மோட்டார் சைக்கிளும் கிணற்றுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினர் விசாரணை
இது குறித்து சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி