ஈரானின் கோர்ரமாபாத் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட அதிரடி தாக்குதல்...!
மேற்கு ஈரானில் அமைந்துள்ள கோர்ரமாபாத் (Khorramabad) விமான நிலையம் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் மெஹ்ர் (Mehr) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையின்படி, இந்தத் தாக்குதலினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து மாகாண அதிகாரிகள் தற்போது தீவிரமாக மதிப்பீடு செய்து வருகின்றனர்.
பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலில், ஈரானின் போக்குவரத்து மற்றும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை முடக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
விமான நிலையம்
இந்த விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை விடுத்திருந்த தொடர் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, ஈரானின் முக்கிய நகரங்களில் உள்ள சிவிலியன் மற்றும் இராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |