இன அழிப்புக்கும் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகியுள்ள ஈழத்தமிழரின் குரலாக அனந்தி சசிதரன்

Sri Lankan Tamils United States of America Tamil
By Shadhu Shanker Jul 07, 2024 10:28 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in இலங்கை
Report

இலங்கை அரசு எப்போது ஐ. நா. உறுப்புரிமைக்குள் கொண்டுவரப்பட்டதோ அப்போதிருந்தே அமெரிக்க வெளியுறவுக்கொள்கை ஈழத்தமிழர் அரசியல் அபிலாசைக்கு முரணாகச் செயற்பட ஆரம்பித்துவிட்டது என அனந்தி சசிதரன்(Ananthi Sasitharan) தெரிவித்துள்ளார்.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை நடாத்தும், பேரவைத் தமிழ் விழாவில் ஈழத்தமிழர்களின் பிரதிநிதியாக கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்த தெரிவித்த அவர், ‘‘ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டம் பற்றியும், அதை அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை எவ்வாறு பாதித்துவந்துள்ளது என்பது பற்றியும், அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் வாழுகின்ற தமிழர்கள் அனைவருக்கும் இது தொடர்பான அடிப்படைப் பொறுப்பு எவ்வாறு உள்ளது என்பது பற்றியும் எனது உரை அமைகிறது.

இன அழிப்பு

இன அழிப்புக்கும் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகியுள்ள ஈழத்தமிழர் தாயக மக்களின் குரலாக எனது உரையை இங்கு முன்வைக்கிறேன். இது விடுதலைக்காக உயிர் கொடுத்த, தமது உறவுகளை ஆகுதியாக்கிய மக்களின் ஏகோபித்த அரசியல் அபிலாசையின் குரல்.

இன அழிப்புக்கும் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகியுள்ள ஈழத்தமிழரின் குரலாக அனந்தி சசிதரன் | Ananthi Sasitharan S Speak In Us About Tamil Eelam

2009 ஆம் ஆண்டு இன அழிப்புப் போரின் முடிவின் போது எனது கணவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியற் பொறுப்பாளர்களில் ஒருவராக நீண்டகாலம் செயற்பட்டவருமான எழிலன் அவர்களை எனது கண்ணுக்கு முன்னால் எமது மூன்று சிறிய பெண் குழந்தைகளுக்கு முன்னால், பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று இலங்கை இராணுவம் அறிவித்த பின்னர் அவர்களிடம் கையளித்தோம்.

அதுவும் ஒரு மதத் தலைவரான மதிப்புக்குரிய பிரான்ஸிஸ் அடிகளாரின் தலைமையில எழிலனும் அவர்போன்ற இன்னும் பலரும் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு முறையில் கையளிக்கப்பட்டார்கள். ஆனால், இன்று வரை அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை, எந்த ஒரு சர்வதேச விசாரணையும் வெளிப்படுத்தவில்லை.

இந்தப் பின்னணியிலே, நீதிக்கான எனது பயணத்தை ஆரம்பித்தேன். அதன் விளைவாகவே எமது மக்களின் ஒரு பிரதிநிதியாக பெருந்தொகையான மக்களின் வாக்களிப்போடு 2013 ஆம் ஆண்டில் வட மாகாண சபையின் தேர்தலில் தெரிவாகினேன். வட மாகாண சபையில் ஓர் அமைச்சராகவும் சிறிது காலம் கடமையாற்றினேன்.

நீதிக்கான பயணம்

வட மாகாண சபையின் அங்கீகாரத்தோடு எனது நீதிக்கான பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டேன். மாகாண சபையின் காலம் 2018 ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்ததும் உடனடியாக அதைக் கலைத்துவிட்ட இலங்கை அரசு ஆறு ஆண்டுகள் கழிந்து இன்று வரை அதற்கான தேர்தலை நடாத்தவில்லை.

இன அழிப்புக்கும் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகியுள்ள ஈழத்தமிழரின் குரலாக அனந்தி சசிதரன் | Ananthi Sasitharan S Speak In Us About Tamil Eelam

இந்தச் சூழலில் நீதிக்கான எனது பயணம் பல வழிகளில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. என்னைப் போன்ற அனைவரின் குரலாகவும் எனது குரலை இங்கு நான் முன்வைக்கிறேன். உயிர் கொடுத்தவர்கள் அனைவரின் குரலாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரின் குரலாகவும் எனது குரல் வெளிப்படுகிறது.

அமெரிக்காவின் சுதந்திர நாளை ஒட்டிய விடுமுறையில் இன்றைய இந்த நிகழ்வு இங்கு நடந்துகொண்டிருக்கிறது. பிரித்தானிய ஏகாதிபத்தியப் பேரரசிடம் இருந்து பிரிந்து சுயாதீனமாக இயங்கப் போவதாக சுதந்திரப் பிரகடனத்தை (Declaration of Independence) 248 ஆண்டுகளுக்கு முன்னர் 1776 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் நாள் வெளியிட்டார்கள்.

அந்தச் சுதந்திரப் பிரகடனத்தின் பின்னரும் பிரித்தானிய காலனித்துவத்துக்கு எதிரான அமெரிக்கப் புரட்சி 1783 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. 1787 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அரசியலமைப்பு (Constutution of the United States) உருவானது. 1791 ஆம் ஆண்டு மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட உரிமைகளின் சட்டவரைவு (Bill of Rights) என்று குறிப்பிடப்படும் பத்து சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்த மூன்று அடிப்படைகளான சுதந்திரப் பிரகடனம், அரசியலமைப்பு, பத்துத் திருத்தங்கள் இணைந்து அமெரிக்க மக்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் வரையறுத்துள்ளன.

ஈழத்தமிழர்களின் போராட்டம்

இந்தச் சுதந்திரப் பிரகடனத்தைப் போல ஈழத்தமிழர் போராட்டத்தில் 1976 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் தந்தை செல்வாவின் தலைமையில் முன்வைக்கப்பட்டது தான் வட்டுக்கோட்டைத் தீர்மானம். இந்தத் தீர்மானம் 1977 ஆம் ஆண்டில் மக்களின் ஜனநாயக ஆணையைப் பெற்றது. இந்த அடிப்படையிலேயே ஈழத்தமிழர்களின் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

இன அழிப்புக்கும் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகியுள்ள ஈழத்தமிழரின் குரலாக அனந்தி சசிதரன் | Ananthi Sasitharan S Speak In Us About Tamil Eelam

1977 ஆம் ஆண்டு ஈழத் தமிழர்கள் தங்களுக்கான அரசியலமைப்பை உருவாக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தபோது அவர்கள் மீது இனப் படுகொலைத் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது.

அரசியலமைப்பை உருவாக்க இயலாதவாறு ஆறாம் சட்டத்திருத்தம் என்ற ஒன்றை 1983 ஆம் ஆண்டு தனது ஆக்கிரமிப்பு ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் அடுத்த கட்டமாக கொண்டு வந்து ஈழத்தமிழர்களின் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று இலங்கை அரசு பிரகடனம் செய்தது.

ஆயுதப் போராட்டத்தின் ஊடாக நடைமுறை தமிழீழ அரசு கட்டமைக்கப்பட்டு சர்வதேச அனுசரணையோடு பேச்சுவார்த்தை நடைபெற்றபோது ஈழத்தமிழர்களுக்கான பில் ஒவ் றைற்ஸ் என்பதன் ஆரம்ப முயற்சியாக வட கிழக்கு மனித உரிமை செயலகத்தின் சாசனம் (Human Rights Charter) உருவாக்கப்பட்டது.

ஆனால், இன்றுவரை சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தமக்கான சுயாட்சியை உருவாக்க முடியாமல் ஈழத்தமிழர்கள் இன அழிப்பின் பல விதமான வடிவங்களுக்கு உட்படுத்தப்பட்டு சீர்குலைக்கப்பட்டுள்ளார்கள்.

எங்களின் தாயகம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்கள் மீதான இந்த இன அழிப்பை நியாயப்படுத்த பயங்கரவாதம் என்று அதை இலங்கை அரசாங்கம் பிரகடனம் செய்த 1980 களின் ஆரம்பத்திலேயே அமெரிக்காவின் அன்றைய அதிபரான ரொனால்ட் ரீகனும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை இலங்கையின் அப்போதைய அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுடன் இணைந்து பயங்கரவாதம் என்று வர்ணித்தார்.

அரசியல் அபிலாசை

உலகத்தின் புதிய ஏகாதிபத்திய அரசாக வளர்ந்துவிட்ட அமெரிக்கா தனது மூதாதையர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஏகாதிபத்திய காலணித்துவத்துக்கு எதிராகப் போராடிய அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தினதும் அதன் அடிப்படைகளையும் மறந்து, தனது ஏகாதிபத்திய நலன்களை மட்டும் சிந்தித்துச் செயற்பட ஆரம்பித்துவிட்டது என்பதற்கு இது உதாரணம்.

இன அழிப்புக்கும் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகியுள்ள ஈழத்தமிழரின் குரலாக அனந்தி சசிதரன் | Ananthi Sasitharan S Speak In Us About Tamil Eelam

1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் நாள் அமெரிக்க அதிபர் ஜெயவர்த்தனவுடன் இணைந்து ஈழத்தமிழர் போராளிகளை பயங்கரவாதிகள் என்று பேசியதை ரீகன் நூலகத்தில் இன்றும் நீங்கள் காணொளியில் காணலாம்.

2001 ஆம் ஆண்டு இரடைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் அல்ல, பல வருடங்களுக்கு முன்னரே, இலங்கை அரசு எப்போது ஐ. நா. உறுப்புரிமைக்குள் கொண்டுவரப்பட்டதோ அப்போதிருந்தே அமெரிக்க வெளியுறவுக்கொள்கை ஈழத்தமிழர் அரசியல் அபிலாசைக்கு முரணாகச் செயற்பட ஆரம்பித்துவிட்டது.

ஏன் தமிழர்களின் ஜனநாயக முடிவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பயங்கரவாதமாக அமெரிக்காவுக்குத் தோன்றியது? ஏன் ஜனநாயகத்துக்கே விரோதமாக அமைக்கப்பட்டுள்ள இலங்கை அரசியலமைப்பை ஆசியாக் கண்டத்திலேயே வயதில் மூத்த ஜனநாயகம் என்று அமெரிக்க அரசு தொடர்ச்சியாகச் சொல்லிவருகிறது என்ற கேள்விகள் மிக முக்கியமானவை.

1989 ஆம் ஆண்டில் பேர்லின் சுவர் விலக்கப்பட்டதோடு அமெரிக்காவின் தலைமையிலான ஒரு துருவ உலக ஆட்சி பலப்பட்டிருந்தது. அதற்கு முன்னரே இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்காமற் போய், திம்புவில் 1985 ஆம் ஆண்டில் தமிழ்த் தரப்பு ஒன்றிணைந்து வெளிப்படுத்திய நிலைப்பாட்டுக்குப் பின்னர், அந்த நிலைப்பாட்டில் தெளிவாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த தரப்பான தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இந்தியா போரில் ஈடுபட்டதும் அதே 1989 காலப் பகுதிதான்.

இந்தியாவின் முயற்சிகள்

1989 ஆம் ஆண்டுக்கு முன்னரே இந்தியாவின் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்பதை வலியுறுத்தவும், அதுமட்டுமல்ல அதற்குத் தமிழ்த் தரப்பு முன்வைத்த நிலைப்பாடும் திம்புவில் வெளியாகிவிட்டது என்பதை நினைவுபடுத்தவும் மட்டும் இதை நான் குறிப்பிடவில்லை.

இன அழிப்புக்கும் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகியுள்ள ஈழத்தமிழரின் குரலாக அனந்தி சசிதரன் | Ananthi Sasitharan S Speak In Us About Tamil Eelam

1989 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2009 ஆம் ஆண்டு வரையான இருபது ஆண்டுக் காலத்தில் அமெரிக்கா தலைமையிலான உலக ஓட்டத்தில், தமிழீழப் போராட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையும் அது முடக்கப்பட்ட இன அழிப்புப் போரும் நடந்தேறியது என்பதை நினைவுபடுத்துவதற்காக பேர்லின் சுவர் உடைந்த 1989 ஆம் ஆண்டை இங்கு குறிப்பிட்டுப் பேச ஆரம்பிக்கிறேன்.

பேர்லினில் சுவர் உடைந்த 1989 ஆம் ஆண்டில் இருந்து எந்த ஆண்டுவரை அமெரிக்காவின் தலைமையிலான ஒரு துருவ அரசியல் நடைபெற்றதோ, அந்தக் காலத்தில் தான் நாம் ஒரு தேசமாகத் திரட்சியடைந்திருந்தபோதும், இராணுவ அரசியல் பலச் சமநிலையைக் கண்டிருந்தபோதும், ஒரு நடைமுறை அரசையே நடாத்தியபோதும், முப்படைகளைக் கொண்டு இயங்கும் நிலைக்குச் சென்றிருந்தபோதும், சர்வதேச அனுசரணையுடன் பேச்சுக்களை நடாத்தும் நிலைக்கு உயர்ந்திருந்த போதும், 2009 ஆம் ஆண்டில் அமெரிக்கா உள்ளிட்ட நாற்பது நாடுகளின் துணையுடன் இலங்கை ஒற்றையாட்சி அரசு ஓர் இன அழிப்புப் போரை நடாத்தி எம்மை அழித்தது.

1989 ஆம் ஆண்டில் எம்மை இந்தியாவின் ஊடாக அழிக்க இலங்கை அரசுக்கு இயலாது போனது. 2009 ஆம் ஆண்டில், நாம் வளர்ந்திருந்தபோதும், அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஸ்யா, இஸ்ரேல், ஏன் உக்ரைன் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் உதவியோடு இலங்கை என்ற ஒரு சிறிய நாட்டின் அரசால் எம்மை அழிக்க முடிந்தது என்றால், அது சாத்தியமாவதற்கு ஒரே ஒரு அடிப்படைக்காரணம் அப்போதிருந்த ஒரு துருவ உலக அரசியல் என்பது அமெரிக்காவில் இருக்கக்கூடிய உங்கள் அனைவரின் விருப்பத்துக்கும் ஆற்றலுக்கும் கசப்பான ஒரு செய்தியாகும்.

இரண்டு வல்லாதிக்க சக்திகள்

இந்தச் செய்தியை மறைத்துவிட்டும், மறந்துவிட்டும், வேறு சாட்டுகளை எமக்கு நடந்த இன அழிப்புக்கு காரணமாகத் தேடுவதில் அர்த்தமில்லை. ஆகவே, அமெரிக்கா தலைமையிலான ஒரு துருவ உலக ஒழுங்கில் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு நாம் அழிக்கப்பட்டோம், எமது நடைமுறை அரசு அழிக்கப்பட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை.

இன அழிப்புக்கும் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகியுள்ள ஈழத்தமிழரின் குரலாக அனந்தி சசிதரன் | Ananthi Sasitharan S Speak In Us About Tamil Eelam

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான அடுத்த இருபது ஆண்டுகளில், அதுவும் 2029 ஆம் ஆண்டுக்கு இன்னும் ஐந்து ஆண்டுகளே இருக்கின்ற 2024 ஆம் ஆண்டில் நாம் ஒரு துருவ உலக ஒழுங்கு உடைந்து பல துருவ உலக ஒழுங்கு விரைவாக உருவாகிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

அருகில் இருக்கும் பிராந்திய வல்லாதிக்கமாக எந்த அளவுக்கு இந்தியாவுக்குப் பொறுப்பிருக்கிறதோ, அதையும் விட அதிகமான பொறுப்பு அமெரிக்காவுக்கு ஈழத்தமிழர் இன அழிவு தொடர்பாக இருக்கிறது. இந்த இரண்டு வல்லாதிக்க சக்திகளும் 2009 ஆம் ஆண்டுக்கு அடுத்து வந்த இதுவரையான 15 ஆண்டுகளில் தமது பொறுப்பைத் தட்டிக்கழித்து வருகின்றன.

இரண்டு தரப்புகளும் தான் தவறுகளுக்குக் காரணம் என்றும், இரண்டு தரப்புகளையும் போர்க்குற்றங்களிலும், மானுடத்துக்கு எதிரான குற்றங்களிலும் சமப்படுத்திவிட்டு தமது பொறுப்பை இந்தியாவும் அமெரிக்காவும் தட்டிக்கழித்துவிடுகின்றன.

இந்தப் பொறுப்பைக் கேள்விக்கு உள்ளாக்கி, வல்லாதிக்கங்கள் தமது நலனை முன்வைத்துச் செயற்பட்டபோது எமக்கு இழைத்த அநீதியின் பாற்பட்ட பொறுப்பை அவர்களுக்கே நினைவுபடுத்தி, ஈழத்தமிழர்களுக்கான சர்வதேசப் பொறுப்புக்கூறலை நிறுவ வேண்டிய பொறுப்பு அமெரிக்காவில் இருக்கும் தமிழ்க் குடிமக்கள் அனைவருக்கும் அதிகமாக உள்ளது என்பதைப் பாதிக்கப்பட்ட தாயக மக்களின் பிரதிநிதியாக நான் இங்கு எடுத்துக் கூறக் கடமைப் பட்டுள்ளேன்.

ஆகவே, அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் அமெரிக்காவில் இருக்கும் ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல அனைத்துத் தமிழர்களுக்குமான கடமை என்ன என்பதைப் பற்றிய சிந்தனை அமெரிக்காவில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் அவசியமாகிறது. அடிப்படையானது. இலங்கையிலே, தேர்தல் அரசியல் மூலம் எமது உரிமைகளை வென்றெடுத்துவிட இயலாது.

முக்கியமான வேண்டுகோள்

இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பு அவ்வாறு வடிவமைக்கப்பட்டு எம்மீது திணிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையிலே இன அழிப்புக்கான சர்வதேச நீதி கோரிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினோம்.

இன அழிப்புக்கும் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகியுள்ள ஈழத்தமிழரின் குரலாக அனந்தி சசிதரன் | Ananthi Sasitharan S Speak In Us About Tamil Eelam

இது ஒன்று தான் கடந்த 15 ஆண்டுகாலத் தேர்தல் அரசியலில் எம்மால் செய்யக்கூடியதாக இருந்த ஒரே ஒரு உருப்படியான காரியம். நான் 2009 ஆம் ஆண்டுக்குப் பின், பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக, அரசியலுக்கு வந்தேன். எமது கோரிக்கைகளை எந்தெந்தச் சர்வதேச மட்டங்களுக்கு எல்லாம் எடுத்துச் செல்லவேண்டுமோ அங்கெல்லாம் சென்று எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையாக இருக்கட்டும், மக்கள் தீர்ப்பாயமாக இருக்கட்டும், தமிழ் மக்கள் முன்னெடுக்கும் மாநாடுகளாக இருக்கட்டும் எங்கும் எமது குரலை ஆங்கிலம் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்வைத்துவந்துள்ளேன்.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு என்னை நீங்கள் அழைத்தபோது இந்தச் சந்தர்ப்பத்தில் என்ன செய்தியை நான் சொல்லவேண்டுமோ அதைச் சொல்வதற்கான ஒரு வாய்ப்பாக இது அமையும் என்று கருதியே நான் அழைப்பை ஏற்று இங்கு வந்துள்ளேன்.

தங்கள் அனைவருக்கும் இந்த அழைப்புக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை, குறிப்பாக அமெரிக்கா வாழ் தமிழ் மக்களுக்கு ஈழத்தமிழர்கள் அனைவரின் சார்பாகவும் இரண்டு முக்கியமான வேண்டுகோள்களை முன்வைக்கிறேன்.

முதலாவது, 1976 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டு 1977 ஆம் ஆண்டில் ஈழத்தமிழர்களின் மக்கள் ஆணையைப் பெற்றுவிட்ட சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான அரசியல் அபிலாசையை ஜனநாயக ரீதியாக எடுத்துச் செல்வதற்கு வேண்டிய சர்வதேச மத்தியஸ்தத்தோடும் கண்காணிப்போடும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தாயகத்திலும், புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் நடாத்தப்படவேண்டிய பொதுவாக்ககெடுப்பு () என்ற கோரிக்கைக்காக அமெரிக்கா வாழ் தமிழர்கள் தமது பொறுப்பை உணர்ந்து செயலாற்றவேண்டும் என்ற வேண்டுகோள்.

சர்வதேச நீதி

இரண்டாவது, ஈழத்தமிழர் மீது 1948 ஆம் ஆண்டில் இருந்தே மேற்கொள்ளப்பட்டுவரும் பண்பாட்டு, கட்டமைப்பு இன அழிப்பு உட்பட்ட 1956 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட பௌதிக இன அழிப்பு உட்பட்ட, 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தொடருகின்ற பண்பாட்டு, கட்டமைப்பு இன அழிப்பு தொடர்பாகவும், மீண்டும் நடைபெறக்கூடிய பௌதிக இன அழிப்பு தொடர்பான ஆபத்து 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் எந்த வித பொறுப்புக்கூறலுக்கும் உள்ளாக்கப்படாமல் நீடிக்கப்படுவதால், இவை அனைத்தையும் உள்ளடக்கிய சர்வதேச நீதி தொடர்பான வேண்டுகோள்.

இன அழிப்புக்கும் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகியுள்ள ஈழத்தமிழரின் குரலாக அனந்தி சசிதரன் | Ananthi Sasitharan S Speak In Us About Tamil Eelam

முதலாம் வேண்டுகோள் சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட பொதுவாக்கெடுப்பு, இரண்டாவது வேண்டுகோள் இன அழிப்புக்கான இலங்கை அரசின் பொறுப்பை சர்வதேச நீதிமன்றில் விசாரணைக்கு உள்ளாக்கவேண்டும் என்ற வேண்டுகோள். இவை இரண்டும் சர்வதேச நீதியின் அப்பாற்பட்டவை.

இவை இரண்டும் இன்றிய வேறெந்த வேண்டுகோள்களும் கோரிக்கைகளும் வெறும் கண்துடைப்பாகவே வெளிப்படும். இந்த வகையில் தமிழ்நாட்டு அரசின் காலஞ்சென்ற முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டு சட்டசபையில் 2013 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் நாள் அன்று நிறைவேற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமும், ஈழத்தில் வடமாகாண சபையில் நான் இணைந்து நிறைவேற்றிய இன அழிப்புக்கான சர்வதேச நீதியைக் கோருகின்ற தீர்மானமும் இந்த இரண்டு அடிப்படைகளோடும் நேரடியாகத் தொடர்புள்ளவை.

 தமிழ் அடையாளம்

இவற்றை முன்னெடுப்பதற்கு அமெரிக்காவின் பத்துச் சட்டத்திருத்தங்களில் தலையான முதலாம் சட்டத்திருத்தம் (First Amendment) என்பதைப் பற்றுக்கோடாகக் கொண்டு, அமெரிக்க அரசின் தவறான வெளியுறவுக்கொள்கையால் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மாற்றியமைக்கும் பொறுப்பு அமெரிக்க மக்களுக்கு உள்ளது என்பதை நினைவுபடுத்தும் வகையிலும் செயலாற்றவேண்டும்.

இன அழிப்புக்கும் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகியுள்ள ஈழத்தமிழரின் குரலாக அனந்தி சசிதரன் | Ananthi Sasitharan S Speak In Us About Tamil Eelam

இந்த இரண்டு வேண்டுகோள்களையும் வட அமெரிக்கத் தமிழர்கள் தமது தமிழ் அடையாளத்தின் அடிப்படை சார்ந்த பொறுப்பாக எடுத்துக் கொண்டு அர்த்தமுள்ள வகையில் செயற்படவேண்டும் என்பது ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பு என்பதை இங்கு நினைவுபடுத்தி, இந்த வாய்ப்பைத் தந்த அனைவருக்கும் நன்றி கூறி அமைகின்றேன்’’ என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025