பொதுமக்களுக்கு லிட்ரோ விடுத்துள்ள அறிவிப்பு
உள்நாட்டு மற்றும் வர்த்தக சந்தை தேவைகளுக்கு ஏற்ற எரிவாயு கையிருப்பு உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு எரிவாயுவை யாரேனும் விற்றால், 1311 என்ற இலக்கத்துக்கு அழைத்து அறிவிக்குமாறு, லிட்ரோவின் வர்த்தக அபிவிருத்தி மற்றும் வர்த்தக தொடர்பாடல் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் திருமதி சமணி பத்திரகே தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொதுமக்கள் தம்மிடம் உள்ள மேலதிக எரிவாயு கொள்கலன்களுக்கும் புதிய எரிவாயு கொள்கலன்களை பெற்று கொள்வதால் அதிக கேள்வி உருவாகியுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, நுகர்வோர் தமது நாளாந்த தேவைகளுக்கு போதுமான அளவில் மாத்திரம் எரிவாயுவைவை பெற்றுக்கொள்ளுமாறு அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், கடந்த இரண்டு நாட்களில் 2,20,000 எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு வழங்கியுள்ளதாகவும், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 90,000 முதல் 1,00,000 கொள்கலன்களை வழங்க நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.