சிறையிலிருக்கும் பௌத்த துறவிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Department of Prisons Sri Lanka Galagoda Aththe Gnanasara Thero Harshana Nanayakkara
By Jaso Oct 14, 2026 01:36 PM GMT
Report

பௌத்த துறவி ஒருவர் சிறைச்சாலையிலிருந்து வெளியே அழைத்து வரப்படும் போது காவி உடை அணிவதற்கு முழு அனுமதி உண்டு என்றும், குறித்த நிக்காயவினால் (பௌத்த பிரிவினால்) அவ்வாறு செய்ய வேண்டாம் என அறிவிக்கும் வரை அந்த உரிமை நீடிக்கும் என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட சட்ட ஒழுங்குமுறைகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை குறித்து ஊடகங்களுக்கு விசேட உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இடைக்கால விதப்புரை

அத்துடன், சிறைச்சாலைச் சட்டங்கள் புதுப்பித்தல் குழுவின் பரிந்துரைகளின்படி நிலையான கட்டளை '356' இற்குப் பதிலாக 356 (அ) எனத் திருத்தமொன்றும் 550 திணைக்களக் கட்டளைத் திருத்தத்திற்கு இடைக்கால விதப்புரையொன்றும் குறித்த குழுவினால் முன்மொழியப்பட்டுள்ளது.

சிறையிலிருக்கும் பௌத்த துறவிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Announcement Regarding Buddhist Monks In Prison

குறித்த பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு சிறைச்சாலை நிலையான கட்டளைகளைத் திருத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

"சிறைச்சாலை நிலையான கட்டளை 356 திருத்தப்பட்டு 356 'அ' என ஒரு பகுதியும், 550 திணைக்களக் கட்டளையைத் திருத்துவதற்காக இடைக்கால விதப்புரையொன்றும் முன்மொழியப்பட்டுள்ளது.

ஞானசார தேரரின் காவியுடை விவகாரம் : கம்மன்பிலவின் குற்றச்சாட்டை முற்றாக மறுக்கும் சிறைச்சாலைத் திணைக்களம்

ஞானசார தேரரின் காவியுடை விவகாரம் : கம்மன்பிலவின் குற்றச்சாட்டை முற்றாக மறுக்கும் சிறைச்சாலைத் திணைக்களம்

பௌத்த துறவியின் காவியுடையை களைய வழங்கப்பட்ட அவகாசம்

அதற்கமைய, பௌத்த துறவி ஒருவர் கைதியாகச் சிறையிலடைக்கப்படும் போது, அக்கைதி அதுவரை அணிந்திருந்த தனது கைதி ஆடையை அகற்றுவது தொடர்பில் பௌத்த அலுவல்கள் திணைக்களத்திற்கு அறிவித்து நடவடிக்கைகள் எடுப்பதற்குச் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சிறையிலிருக்கும் பௌத்த துறவிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Announcement Regarding Buddhist Monks In Prison

வேறு மதத்தைச் சேர்ந்த மதகுரு ஒருவர் கைதியானால், இந்த ஏற்பாடுகள் அதற்குப் பொருத்தமான வகையில் மாற்றியமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட வேண்டும். அத்துடன், நிலையான கட்டளை 550 இல் புதிதாக ஒரு பகுதி சேர்க்கப்பட்டுத் திருத்தம் வருகிறது.

சிறையிலிருந்து  அழைத்துவரும்போது காவியுடை அணிய அனுமதி

அதன்படி, பௌத்த துறவி ஒருவர் கைதியாகச் சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டால், அத்தகைய சந்தர்ப்பத்தில் காவி உடை அணிந்திருப்பதற்கு முழுமையான அனுமதி வழங்கப்படுகிறது.

சிறையிலிருக்கும் பௌத்த துறவிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Announcement Regarding Buddhist Monks In Prison

தேரர் சார்ந்த நிக்காயவிலிருந்து அவ்வாறு செய்ய வேண்டாம் என அறிவித்தல் கிடைக்கும் வரை அந்த அனுமதி தொடர்ந்து இருக்கும். இது தொடர்பான இடைக்காலக் குழு அறிக்கையும் பதில் சிறைச்சாலைகள் ஆணையாளருக்குக் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார். 

ஞானசார தேரர் தொடர்பான விசாரணையிலிருந்து விலகிய நீதியரசர்

ஞானசார தேரர் தொடர்பான விசாரணையிலிருந்து விலகிய நீதியரசர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026