விசேட பாடசாலை விடுமுறை: வெளியான அறிவிப்பு
நாட்டில் சில பாடசாலைகளுக்கு சீரற்ற காலநிலை காரணமாக காலவரையின்றி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் காலவரையின்றி மூடப்படவுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.
குறித்த அறிவித்தலை ஊவா மாகாண முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ளது.
வானிலை மற்றும் காற்று நிலைமை
இலங்கைக்குத் தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது, அடுத்த 30 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மற்றும் காற்று நிலைமை அடுத்த சில நாட்களில் (நவம்பர் 25 - 29) மேலும் தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீ வரையான மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.
இந்நிலையில், ஊவா மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் காலவரையின்றி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |