அரச நிறுவனங்கள் ஐந்தின் வருடாந்த இலாபங்கள் திறைசேரிக்கு
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lankan Peoples
President of Sri lanka
By Dilakshan
ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சிற்குரிய 05 நிறுவனங்களின் வருடாந்த இலாபமாக, 925 மில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்குவதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று(10) அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையிடம் இருந்து 350 மில்லியன் ரூபா, லங்கா போஸ்பேட் நிறுவனம் 300 மில்லியன் ரூபா, பி.சி.சி. நிறுவனம் 100 மில்லியன் ரூபா, தேசிய உப்பு நிறுவனம் 100 மில்லியன் ரூபா, இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனம் 75 மில்லியன் ரூபா ஆக, வருடாந்த இலாபத் தொகையாக 925 மில்லியன் ரூபா திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
கலந்துக் கொண்டோர்
ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி