இஸ்ரேல் - ஹமாஸ் போர் : மீண்டும் ஒரு போர் நிறுத்தம் மேற்கொள்வதில் முன்னேற்றம்
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் மீண்டும் ஒரு போர்நிறுத்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கட்டார் தெரிவித்துள்ளது.
பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் இஸ்ரேலிடமிருந்து நோ்மறையான யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை ஏற்பது குறித்து ஹமாஸ் அமைப்பு பரிசீலித்து வருகிறதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை, கத்தாா் முன்னிலையில் நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் பலனாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த நவம்பா் மாதம் 24-ஆம் திகதி தொடக்கம் 30-ஆம் திகதி வரை போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
பேச்சுவார்த்தை
அதன்போது, பணயக் கைதிகள் பலரும் பரிமாற்றம் செய்யப்பட்டனர்.பின்னர், போா் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தை முறிந்ததைத் தொடா்ந்து காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் ஆரம்பித்தது.
இந்நிலையில், மீண்டும் போா் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகள் பரிமாற்றத்திற்கான இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்தி வரும் கட்டார் தற்போது தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |