மகனை தேடியலைந்த மற்றுமொரு தாயின் உயிர் பிரிந்தது
''சாகுறதுக்கு இடையில என்ட பிள்ளைகள கண்ணால காணனும். கடைசி வரைக்கும் நான் சாகும் மட்டும் மரண சான்றிதழை நான் வாங்க மாட்டேன்"" என உறுதியாக இருந்த தங்கராசா செல்வராணி, அதே நிலைப்பாட்டில் இன்று இந்த உலகை விட்டு விடைப் பெற்றுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும், அதன் பாதிப்புகள் இன்று வரை அவ்வாறே காணப்படுகின்றன.
யுத்த காலப் பகுதியில் காணாமல் போன உறவுகளை தேடி, இன்றும் இலங்கையில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காணாமல் போனோரை தேடும் தேடல், இன்றும் தொடர்கின்றது.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இன்றும் தமது உறவுகளை தேடி போராடி வருகின்ற நிலையில், போராட்டங்களில் ஈடுபட்ட பலர், போராட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வயது முதிர்வு காரணமாக ஏற்படும் நோய்கள், உடலில் வலுவின்மை போன்ற காரணங்களில் பெற்றோர் போராட முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
அதேவேளை, தமது உறவுகளை தேடி போராட்டங்களை ஆரம்பித்து, வீதிகளில் போராடிப் போராடி, இறுதி வரை காணாமல் போன உறவுகளை கண்டறிய முடியாது, இன்று வரை 108ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக காணாமல் போனோரின் உறவுகள் சங்கம் தெரிவிக்கின்றது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
