சிறைச்சாலை அமைப்பில் மாற்றம்: ஜனாதிபதி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நேற்று (20-07-2026) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலைத் திணைக்களத்தின் அதிகாரிகள் பங்கேற்ற இக்கலந்துரையாடலில், சிறைச்சாலை மறுசீரமைப்பு தொடர்பாக அவர்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் கருத்துக்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளின் வசதி
அத்துடன், சிறைச்சாலைகளின் வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் அதற்காகப் பயன்படுத்தக்கூடிய மாற்று நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் ஆயிஷா ஜினசேன மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்