இன்றுமுதல் நடைமுறை வெளியானது வர்த்தமானி
Anura Kumara Dissanayaka
Sri Lanka Government Gazette
New Gazette
By Sumithiran
மதுபான உற்பத்தி மீதான வரி செலுத்துதல் மற்றும் கட்டணம் வசூலிப்பதில் பொருந்தக்கூடிய விதிகளை திருத்தி புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (28) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உரிய திகதியில் அல்லது அதற்கு முன் வரி செலுத்த வேண்டும்
கலால் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 22 இன் கீழ் ஒவ்வொரு உரிமைதாரரும் உரிய திகதியில் அல்லது அதற்கு முன் வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கும் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, உரிய திகதியிலிருந்து 30 நாட்களுக்குள் வரி அல்லது கட்டணத்தை முழுமையாக செலுத்தத் தவறிய உரிமைதாரரின் உரிமம் இடைநிறுத்தப்படும் என்று புதிய வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்