ஜனாதிபதி அநுரவுக்கு என்ன தேவை: எதிரணி எம்.பி கண்டுபிடிப்பு
ஜனாதிபதிக்கு பாதுகாப்பு தேவை, அதே நேரத்தில் அவர் பொழுதுபோக்கை அனுபவிக்க வேண்டும் என்று ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அநுரவுக்கு பொழுதுபோக்கு தேவை
ஒரு ஜனாதிபதி தனது பணியைச் செய்யும்போது மன அழுத்தத்திற்கு ஆளாகிறார். எனவே, ஒருவர் எப்போதும் மன அழுத்தத்தில் வேலை செய்யக்கூடாது என்பதால் அவருக்கு பொழுதுபோக்கு தேவை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் போதுமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு தேவை
முன்னாள் ஜனாதிபதிகளும் கடந்த காலத்தில் தேசத்திற்கு சேவை செய்தவர்கள். எனவே, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை.
இருப்பினும், அவர்களுக்கு ஊழியர்கள் மற்றும் அலுவலகங்கள் போன்ற மேலதிக சலுகைகளை வழங்கக்கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
